திருக்குறள் (Thirukural)

Friday, 22 July, 2011

விளம்பரம்


Source: http://santhoshpakkangal.blogspot.com/2011/07/blog-post.html

உங்களுக்கு தம்பியோ, தங்கச்சியோ இல்லைன்னு வருத்தமா?

                  வாழ்க்கையில என்ன இருந்து என்னா ஆவப்போவுது ஒரு தம்பி  தங்கச்சி இல்லம போயிடிசே, எனக்கு இருக்குற திறமைக்கு என் கிட்ட ஒரு பிள்ளையை குடுத்து பாரு நான் வழிகாட்டியா இருந்து எப்படி பெரிய ஆள் ஆக்குறேன்னு” என்று நினைப்பவரா? அப்ப நீங்க போக வேண்டிய இடம் “வாழை”.
                நாம வாழ்க்கையில இந்த அளவு உயர்ந்து இருக்க என்ன காரணமுன்னு யோசிச்சி பாத்தா யாராச்சும் ஒருத்தர் நம்மளை நம்ம வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்துலையும் ’இது பண்ணு தம்பி இதை படி தம்பி’ன்னு வழி நடத்தி இருப்பாரு. இந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பது இல்லை.

               வாழையின் நோக்கமே அந்த மாதிரியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழிகாட்டியா ஒருவரை நியமனம் செய்வதே.. அட இந்த டீலிங் நல்லா இருக்கே, வாழையில நான் என்ன பண்ணலாமுன்னு கேக்கறீங்களா? அப்ப கீழ இருக்குற மேட்டரை படிங்க.

               வாழையில் இருக்கும் நண்பர்களை மூன்று விதமாக பிரிக்கலாம், வழிகாட்டிகள், தொண்டர்கள் மற்றும் நன்கொடையாளர்கள்.

               வாழையில் வழிகாட்டியாக விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஒரு தம்பி/ward அளிக்கப்படுவார். என்னாடா இது.. வழிகாட்டி, Mentor, கிண்டாருன்னெல்லாம் சொல்றாங்களே இதுக்கு பெரிய அப்பாடக்கரா இருக்கணும் போலயேன்னு நெனைச்சி பயந்துடாதீங்க. உங்களுக்கு ஒரு தம்பி இருந்தா நீங்க என்ன பண்ணுவிங்க?அடிக்கடி போன் போட்டு பேசுவீங்க, போயி பாப்பிங்க, இதை பண்ணுடா அதை பண்ணுடான்னு சொல்லுவிங்க இல்லயா.. அந்த வேலயத்தான் நீங்க இங்க செய்யப்போறீங்க. வாழைக்கு பெண் வழிகாட்டிகள்/Mentorகள் நிறைய தேவைப்படுகிறார்கள்.

            தொண்டர்கள் வாழைக்கு தேவையான அலுவலக ரீதியான பணிகள் அப்புறம் த்த இன்ன பிற வேலைங்க இருக்கும் இல்ல அதுல உதவலாம்.

             நன்கொடையாளர்களை பத்தி பெருசா விளக்கம் தேவையில்லைன்னு நெனைக்கிறேன்.

              இது பற்றி மேலும் விவரம் அறியவும், வாழையோடு இணைந்துகொள்ளவும் 24 ஜுலை 2011 அன்னிக்கு சென்னையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நிகழவிருக்கும் வாழையின் ஒரு அறிமுக நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ளுங்கள்.


    IEEE Madras Section, (Opp. to Anna Centenary Library)
    25, Gandhi Mandapam Road, Kotturpuram
    Chennai, Tamil Nadu


    இது பற்றிய மேலும் விவரம் அறிய Kalyanஐ அணுகவும் (9952992454)

    வாழையின்  Facebook முகவரி.     http://www.facebook.com/event.php?eid=213560722021121

    வாழையின் இணையதள முகவரி http://www.vazhai.org/

No comments:

Post a Comment