திருக்குறள் (Thirukural)

Wednesday 16 February 2011

அல்லக்கை-னா

அல்லக்கை-னா என்னன்னு ஒரு ஆராய்ச்சி !!!.

எவ்ளோ எளிதான விஷயம். இதற்கு போய்.??

அல்லக்கை:
முதலாளித்துவம் பரவியுள்ள இந்த சமூகத்தில், சந்தைக்கு செல்லும் பெரும் முதலாளிமார்கள் ஒரு சரக்கை ( சாராயம் அல்ல) தகுதி ஆராய எடுத்து பார்க்க வேண்டி வரும், அந்த வேளையில் குனிந்து சரக்கு எடுக்க முடியாது, அதற்கு அவர்களின் தொப்பையும் இடம் கொடுக்காது, அவர்களின் கையும் அழுக்கு ஆகிறும், மேலும் அவர்களின் பை திருட்டு போகும் வாய்ப்பும் அதிகம் அதனாலே அவங்க தங்களோட ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போவாங்க, அவர் அவர் கையாலே அள்ளி முதலாளியிடம் கான்பிபார்கள். அவர்களே பின்னாளில் அள்ள கை என்று அழைக்க பட்டார்கள். பின்னாளில் இதுவே மாறி அல்லக்கை என்றாகி விட்டது. வெகு நாளுக்கு பிறகு ஏவிய வேலை செய்யும் அனைவரையும் அல்லக்கை என்று அழைக்கலானார்கள் மக்கள்.

ஸ்..ஸ்...ஸ்... அப்பா.... இன்னும் என்ன? என்ன? கேள்விலாம் வரப்போகுதோ?

No comments:

Post a Comment