Tuesday, September 15, 2015

Saturday, May 16, 2015

கர்பிணி பெண்களுக்கு

சில கர்பிணி பெண்களுக்கு மசக்கை சமயத்தில் என்ன சாப்பிட்டால் வாந்தி நிற்கும் வாக்கு ருசி படும் என்று தெரியாது,
டிப்ஸ் உங்களுக்காக..
  

1.கர்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்து விடும்.
2. ஸ்வீட்டுக்கு போடும் கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டுபடும். மயக்கமாக இருந்தால் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ் போன்றவை குடிக்கலாம்.
3. தலைவலி, ஜுரம், சளி, பல் வலி போன்றவைக்கு டாக்டரிம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம்.
4. சூடு தன்மை உள்ள பழங்கள் காய்கள், உண்வுகள் அதிகம் சாப்பிடவேண்டாம்.
5. சாப்பிட கூடாத பழங்கள்
கொய்யா , பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை.
6. தினம் சாப்பிட வேண்டிய பழங்கள்
ஆப்பிள், பச்சை திராட்சை,மாதுளை, ஆரஞ்ச்
7. இறால், சிக்கன், பீஃப் போன்றவை கூட ரொம்ப சூடு ‍இதேல்லாம் கூட தவிர்ப்பது நல்லது. சிக்கன் நிறைய தயிர் சேர்த்து செய்து கொஞ்சமாக சாப்பிட்டு கொள்ளலாம்.
8. புரோகோலி மற்றும் ஸ்பினாச் கீரையில் அதிக அயர்ன் இருக்கு, இவை இரண்டையும் அடிக்கடி சமைத்து உண்ணலாம். ஸ்பினாச் சூப், கூட செய்து குடிக்கலாம்.
9. நெல்லிக்காய் நிறைய வாங்கி சர்க்கரை பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை வேகவைத்து பாகில் ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம்
10.பெருங்காயம், பூண்டு,சோம்பு சிறிது குறைத்து
பயன்படுத்தவும். 

Wednesday, May 13, 2015

தமிழ் மொழி அல்ல , உயிர்.


அமெரிக்கா செல்வதற்கான குடியேற்ற அனுமதி பெற (விசா) நேர்காணலுக்கு அமெரிக்க தூதரகம் (Consulate) சென்றிருந்தோம். அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலம் புரிந்து நாம் பதில் அளிப்பது சிரமமாக இருக்கும் என்று தோன்றியதால், நேர்காணல் தமிழில் வேண்டும் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
நேர்காணலின்போது மொழி பெயர்ப்பாளருக்காகக் காத்துக் கொண்டிருந்த எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரம் ஆகியும் மொழி பெயர்ப்பாளர் யாரையும் காணாமல் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்து கொண்டு, எங்களை நேர்காணல் செய்ய இருந்த குடியேற்ற அதிகாரி ஒரு பெண் என்பதால் 'குட் மார்னிங் மேம்' என்று நாங்கள் சொல்ல... அவரோ அழகு தமிழில் 'வணக்கம்' சொல்லி எங்களை அதிர வைத்தது மட்டுமல்லால், தொடர்ந்து தமிழிலேயே முழு நேர்காணலையும் நடத்தி முடித்து எங்களுக்கு அமெரிக்கா செல்ல அனுமதி (விசா) வழங்கி, எங்களுடைய பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்களையும் சொல்லி வழியனுப்பினார்.
அவருடைய தமிழ் உச்சரிப்பும் அவர் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகளும் என்னை பிரமிப்படைய வைத்தது. மறந்தும் கூட அவர் ஒரு ஆங்கில வார்த்தையை அவருடைய உரையாடலில் கலக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேர்காணல் முடிந்து கிளம்பும்போது அவருடைய தமிழார்வத்தை மறக்காமல் பாராட்டி விட்டுத்தான் வந்தோம். மனசுக்குள், 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற பாரதியின் கவிதை வரிகள் வந்து போயின.
தமிழ்நாட்டில், தமிழ் குடும்பத்தில் பிறந்தும், பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படிப்பதால் 'எங்களுக்கு தமிழில் படிக்க வராது, எழுத வராது' என்று தமிழைக் கொலை செய்யும் நம் நாட்டு பிள்ளைச் செல்வங்களை நினைத்து எனக்கு வேதனையாக இருந்தது. தமிழ் படிப்பதை கேவலமாக நினைக்கும் நிலை எப்போது மாறும்?
அழியாத செல்வங்களாய் இருக்கும் நம் தமிழ் இலக்கியங்களை நம் நாட்டினர் போற்றும் காலம் எப்போது வரும் என்று மனசுக்குள் ஏக்கமாக இருக்கிறது.
ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் நமக்கு வேலை நிமித்தம் தேவைதான் என்றாலும்... நமக்கு உயிர் போன்றது நம் தாய்மொழிதான். அதைக் கசடறக் கற்காவிட்டாலும், 'தமிழில் படிக்கத் தெரியாது... முயற்சி பண்றேன்னு' பிறமொழி பேசுபவர்கள் தமிழ் பேசுவது போல கசக்கிப் பிழியாமல், படிக்கவாவது முயற்சி செய்யலாம்.
இப்போது வெளிநாட்டில் வாழும் நம் தமிழ் நாட்டினர் மட்டுமல்லாமல், மற்ற மொழிகளைப் பேசுபவர்களும் வார விடுமுறையில் அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் கோயில்களில் மொழிவாரியாக வகுப்புகள் எடுக்கிறார்கள். குழந்தைகளும் உற்சாகமாகக் கற்றுக் கொள்கிறார்கள்.
உலகின் மூத்த மொழியாம் நம் தமிழ் மொழிக்குத் தமிழர்களாகிய நாம்தான் தலை வணங்கி, மொழியையும் வாழ வைத்து, நாமும் வாழ வேண்டும். தமிழ் மொழியை நம் குழந்தைகளுக்கு வெல்லப் பாகாக இனிக்கச் செய்வது பெற்றோர்களாகிய நம் கையில்தான் உள்ளது .
தாய்மொழிதான் அவரவர்களுக்கு உயிர்மொழி..! எனவே நாமும் நம்முடைய தாய்மொழியாம் அமுதத் தமிழை உயிராக மதிப்போம்.

Sunday, March 22, 2015

உஷார் சகோதரிகளே /தோழிகளே!


பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. 'வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?' என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில்.
என்ன ஆபத்துகள்?
***********************
* யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.
* உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும்.
* கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும்.
* உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.
* உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.
எப்படி தவிர்க்கலாம்?
****************************
உங்களது வாட்ஸ்அப் தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம் என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில்(செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம். குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.
முடிந்த வரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்அப்பில் பேசுவது பாதுகாப்பானது. ஒருவேளை இதனை செய்ய தவறும்போது ஏற்படும் பாதிப்புகள் சமூக வலைதளங்களைவிட மோசமானதாக இருக்கும்...!!!
ஆகையால் எச்சரிக்கையுடன் இருங்கள் சகோதரிகளே !!!
------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்

Saturday, March 7, 2015

Men Responsibility on WOMEN

She got late at office that day and she had to go home alone. 
She started walking towards the auto stand ,But it was too late, 
she had to wait for an auto. She felt like someone was following her, 
she turned back and 'Bhoo' he said.  She got scared and he laughed out 
loud.Her office colleague it was. "I'm here because  I can't let you walk alone
towards the auto stand and don't worry  I'll be with you till you get an auto. 
You are my responsibility"  he said.
After ten minutes of wait,  An auto came but no passenger was in there. 

She knew that this could probably be the last auto to pass by.  She
looked in an uncomfortable manner At the auto driver. "Don't worry sister, 
I'll drop you at your home safely.  You are my responsibility" 
the auto driver said. She sat in.
Her home was in a dark lane, 


she had to walk 
almost five minutes in the lane 
to reach her 
home.  

It was a neighbour. He threw the cigarette away and said  "Come i'll walk 
with you till you reach home.
Don't worry beti you are like my daughter only.  
You are my responsibility"
The girl finally reached home safely.
Everytime i gave a pause in the write up, you must have felt that something 
wrong will happen. 

This fear is what our society has given us.
It will no longer have an existance if every man be like that office colleague 
or the auto driver or the neighbour.
Dear men, like your sister, mother and wife are
your responsibilities, 'She' is your responsibility too.

Saturday, January 17, 2015

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி....?


தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி
www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்
அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும்
பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்
உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number
Create ஆகிவிடும்.
குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save
கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.
குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து
கொள்ளலாம்.
குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.
குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : RPD2013M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம்,
RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.
User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்.!!

THanks to Source : https://www.facebook.com/Puradsifm/posts/914556065231793:0